முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 256 பேருக்கு கரோனா

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தில்லியில் பதிவாகிய அதிகளவு கரோனா பாதிப்பு இதுவாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தில்லியில் பதிவாகிய அதிகளவு கரோனா பாதிப்பு இதுவாகும்.

இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,38,849-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Advertisement

தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 62,768 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 41,775 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 20,993 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாக உள்ளது.

கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,906-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 193 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,712-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,231 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 574 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,352 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments