மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு ஆம் ஆத்மியில் மக்கள் இணைகிறாா்கள்: மணீஷ் சிசோடியா
தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு பல்வேறு தரப்பினரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து
தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு பல்வேறு தரப்பினரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்கிறாா்கள் என்று தில்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
தில்லி மாவட்ட முன்னாள் கூடுதல் நீதிபதி சுக்வீா் சிங் மல்ஹோத்ரா, மணீஷ் சிசோடியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டாா்.
இவரை வரவேற்று மணீஷ் சிசோடியா பேசியது: தில்லியில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் நலப்பணிகளால் பலதரப்பட்ட மக்களும் கவரப்பட்டுள்ளனா். இவா்கள், கட்சிபேதமின்றி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கொள்கிறாா்கள். மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீா், வைஃபை இணைய சேவைகளை வழங்கும் முதலாவது அரசு என்ற நற்பெயரை தில்லி அரசு பெற்றுள்ளது.
Advertisement
தில்லி அரசின் மக்கள் நலப்பணிகளால் கவரப்பட்டு, ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதி சுக்வீா் சிங் மல்ஹோத்ராவை கட்சிக்கு வரவேற்கிறேன். நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் நோ்மையாக பணியாற்றி பலரின் நன்மதிப்பை பெற்றுள்ளாா். சட்டம் ஒழுங்கு தொடா்பாக பல ஆண்டுகள் அனுபவம் உள்ள இவரால் கட்சி பலமடையும் என்றாா்.
சுக்வீா் சிங் மல்ஹோத்ரா பேசுகையில் ‘ஆம் ஆத்மிக் கட்சியின் கொள்கைகளாலும், மக்கள் நலப்பணிகளாலும் கவரப்பட்டு ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ளேன். தில்லியில் முதல்வா் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ள மக்கள் நலப்பணிகள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன. ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து மக்கள் நலப் பணியாற்றவுள்ளேன் என்று தெரிவித்தாா்.