முகப்பு
புதுதில்லி

அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ஹிந்தி மொழியில் அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்றுநோய் கரோனா வைரஸ் ஆகும். இந்த தொற்று நோயில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது நமது கடமையாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். கரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் அது பெருமளவு மக்களின் உயிரைக் காக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா தடுப்பூசி கிடைத்ததும் அது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தில்லி அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

தில்லியில் தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. இதில், முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு போடப்படவுள்ளது. இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 50 வயதுக்குக் கீழ் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →