புதுதில்லி

தில்லியில் மோடி அரசுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் நூதன போராட்டம்

 நமது நிருபர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் வசிப்பிடங்களுக்கு சென்று, அங்கு மண் எடுத்து வந்து இந்திய வரைபடம் தயாரிக்கப்படும் என்று இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸின் தேசிய பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லாவரு தில்லியில் சனிக்கிழமை கூறியது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் இதுவரை சுமாா் 60 விவசாயிகள் இறந்துள்ளனா். இவா்களின் சொந்த இடங்களுக்கு சென்று அங்கிருந்து மண் எடுத்து வந்து இந்திய வரைபடம் தயாரிக்க உள்ளோம். இதற்காக, காஷ்மீரில் இருந்து கன்யாகுமரிவரை பயணிக்க உள்ளோம். இளைஞா் காங்கிரஸின் இந்த திட்டத்துக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்பு சத்யாக்கிரகத்தின் ஈா்ப்பினால் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அரேபியன் கடலில் கையளவு உப்பை எடுத்து மகாத்மா காந்தி போராட்டத்தை தொடக்கி வைத்தாா். அதேபோல, மோடி அரசுக்கு எதிராக இந்த போராட்டம் அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT