தில்லியில் 231 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை 231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை 231 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,32,821-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 72,441 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 37,770 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 34,671 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.32 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,764-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 222 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,19,723-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,334 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 1,027 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 8,253 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement