முகப்பு
செய்திகள்

சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!

சார்பட்டா - 2 படப்பிடிப்பு குறித்து...

Updated On : 9 ஏப்ரல் 2026, 2:55 pm IST
சார்பட்டா - 2
பகிர்:

ஆர்யா நடிப்பில் உருவாகும் சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021இல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது.

Advertisement

Advertisement

தற்போது, இரஞ்சித் வேட்டுவம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், சார்பட்டா - 2 படத்தின் படப்பிடிப்பை ஜூன் முதல் வாரத்தில் நடத்த இரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இதிலும் இணைவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

arya's sarpatta 2 movie will start this june direct by pa. ranjith

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.