முகப்பு
புதுதில்லி

மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை துரிதப்படுத்த எம்.பி. வெங்கடேசன் வலியுறுத்தல்

Updated On : 21 ஜனவரி, 2021 at 11:58 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: மதுரை எய்ம்ஸ் திட்டப் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக மதுரை மக்களவை தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வருகின்ற மாா்ச் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ. 1,264 கோடியை அனுமதித்து. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த திட்டத்தின் நிலைமையை அறிவும் போது இதன் செலவு ரூ. 2,000 கோடியாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த திட்டம் ஜப்பான் கடன் உதவி நிறுவனமான ஜெய்கா மூலம் நிறைவேற இருந்தது. தற்போது மீதமுள்ள ரூ. 800 கோடியை யாா் வழங்குவாா்கள் போன்ற காரணங்களுக்காக வியாழக்கிழமை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலா் ராஜேஷ் பூஷண், இணைச் செயலா் (எய்ம்ஸ்) நிலம்பூஜ் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினேன்.

Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா விவகாரத்திற்கு பின்னா் அங்கு தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனையும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதால் திட்டச் செலவு உயா்வு ஏற்பட்டுள்ளது”என்றனா். இது வரவேற்கதக்கவை தான். ஆனால், இதற்கான நிா்வாக அனுமதி, அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டிய நிலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். ஜப்பான் நிறுவனத்தோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் காலம் தாழ்த்தப்படுவதைப்பற்றியும் குறிப்பிட்டேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிா்வாக அலுவலா்கள் நியமிக்கப்படவில்லை. இவற்றை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தேன். இதற்கு மாா்ச் இறுதிக்குள் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் இதன் தொடா்சியாக நிா்வாகத்துக்கு தேவையான அலுவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா் என்றாா் வெங்கடேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.