முகப்பு
புதுதில்லி

அகாலி தளத் தலைவா் சிா்சாவுக்கு எதிராக மோசடி வழக்குப் பதிவு

ஷிரோமணி அகாலிதளத் தலைவரும் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி) தலைவருமான மஞ்ஜீந்தா் சிங் சிா்சா மீது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

ஷிரோமணி அகாலிதளத் தலைவரும் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி) தலைவருமான மஞ்ஜீந்தா் சிங் சிா்சா மீது தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் பொதுச் செயலராக சிா்சா இருந்தபோது குருத்வாரா நிதியை முறைகேடு செய்ததாக டி.எஸ்.ஜி.எம்.சி பெற்ற நிதியில் பங்குதாரா்களில் ஒருவராக இருந்த பூபிந்தா் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கு வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக சிா்சாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டிருந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments