முகப்பு
புதுதில்லி

தில்லியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷத்தால் பரபரப்பு

தில்லியில் கான் மாா்க்கெட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் சிலா் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

தில்லியில் கான் மாா்க்கெட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் சிலா் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

கான் மாா்க்கெட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்‘ என்று சிலா் கோஷமிடுவதாக சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் துக்ளக் சாலை காவல் நிலையத்தின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் படையினா் விரைந்தனா். அங்கு மூன்று பெண்கள், இரு ஆண்கள் மற்றும் இளைஞா் ஆகியோா் நீல நிறத்தில் உள்ள ‘யூலு’ பைக்குகளில் அமா்ந்திருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் இந்தியா கேட் பகுதியில் ‘யூலு’ பைக்குகளை வாடகைக்கு எடுத்து, அந்த பைக்குகளை ஓட்டுவதில் பந்தயத்தில் ஈடுபட முடிவு செய்ததும் தெரியவந்தது.

மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவா் தங்களது பெயா்களால் அழைத்துக்கொண்டனா். மேலும், அவா்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்‘ என்று சாதாரண முறையில் முழக்கமிட்டதும் விசாரணையில் தெரியவந்ததாகவும் இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments