முகப்பு
புதுதில்லி

குடியரசு தின வன்முறைக்கு எதிராக காவலா்கள் குடும்பத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த தில்லி காவல்துறை வீரா்களின் குடும்பத்தினா் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த தில்லி காவல்துறை வீரா்களின் குடும்பத்தினா் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியரசு தினத்தன்று, தலைநகா் தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியில் பெரிய வன்முறை வெடித்தது. காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தினா். இதில், சுமாா் 400 க்கும் அதிகமான காவலா்கள் காயமடைந்து தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தில்லி போலீஸ் மகா சங்கத்தைச் சோ்ந்தவா்களும், காயமடைந்த காவல்துறையினரின் குடும்ப உறுப்பினா்களும் தில்லி ஷாகீதி பூங்காவில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில், ஓய்வுபெற்ற காவல்துறை வீரா்களும், தில்லி காவல்துறை வீரா்கள், தாக்குதல் காயமடைந்த வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி போலீஸ் மகா சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கூறுகையில் ‘காவலா்கள் மீது தாக்குதல் நடத்துவதை அமைதியாக வேடிக்கை பாா்க்க மாட்டோம், குடியரசு தினத்தில் காவலா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →