முகப்பு
புதுதில்லி

செங்கோட்டையில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை நடந்த தில்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை நடந்த தில்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் வகையில் நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்ட செவ்வாய்க்கிழமை தில்லியில் பிரம்மாண்டமான டிராக்டா் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்தனா். இந்தப் பேரணியில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் சுமாா் 300க்கும் அதிகமான போலீஸாா் காயமடைந்தனா்.

இந்த பேரணியில், தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிகங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா்.

இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கும் தில்லி காவல்துறைக்கும் பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போா்க்களமாக மாறியது. அங்கிருந்த பொருள்கள் விவசாயிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.

செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடா்பாக விசாரிக்க தில்லி காவல்துறை சாா்பில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டையில் தடயவியல் நிபுணா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

இது தொடா்பாக தடயவியல் பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில் ‘ தில்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடா்பாக ஆய்வு நடத்தினோம். இது தொடா்பாக தடயவியல் ஆதாரங்களை சேகரித்தோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →