முகப்பு
புதுதில்லி

தில்லிக்கு ஜூலை 10-இல் பருவமழை!

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூலை 10 -ஆம் தேதி தில்லியை எட்டும். இது கடந்த 15 ஆண்டுகளில் மிகவும் தாமதமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்களன்று தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூலை 10 -ஆம் தேதி தில்லியை எட்டும். இது கடந்த 15 ஆண்டுகளில் மிகவும் தாமதமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்களன்று தெரிவித்துள்ளது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீதமுள்ள பகுதிகள், பஞ்சாப், ஹரியாண, ராஜஸ்தான் மற்றும் தில்லியின் சில பகுதிகள் ஜூலை 10-ஆம் தேதி வரை பருவமழை முன்னேற வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 10 முதல் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவரான குல்தீப் ஸ்ரீவாஸ்தவா பருவமழை 2012-இல் ஜூலை 7, 2006-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி தலைநகரை அடைந்தது. 2002-ஆம் ஆண்டில், தில்லியில் ஜூலை 19 முதல் பருவமழை பெய்தது. 1987-ஆம் ஆண்டு ஜூலை 26- ஆம் தேதி பருவமழை வருகையை நகா் பதிவு செய்தது.

Advertisement

கேரளத்தில் இரண்டு நாள்கள் தாமதமாக வந்த பிறகு, பருவமழை நாடு முழுவதும் பெய்யத் தொடங்கியது. கிழக்கு, மத்திய மற்றும் அருகிலுள்ள வடமேற்கு இந்தியாவை விட ஏழு முதல் 10 நால்கள் முன்னதாகவே இருந்தது. ஆனால், அதன் முன்னேற்றத்திற்கு நிலைமைகள் சாதகமாக இல்லாத நிலையில், பருவமழை பலவீனமடைந்தது. ஜூன் 15-க்குள் காற்று அமைப்பு தில்லியை அடையக்கூடும் என்று வானிலை ஆய்வு அலுவலகம் முன்னா் கணித்திருந்தது, இது 12 நாள்கள் முன்னதாகவே இருந்திருக்கும். பொதுவாக, பருவமழை ஜூன் 27-க்குள் தில்லியை அடைந்து ஜூலை 8-க்குள் முழு நாட்டையும் உள்ளடக்கும். கடந்த ஆண்டு, காற்று அமைப்பு ஜூன் 25 அன்று தில்லியை அடைந்து ஜூன் 29-க்குள் முழு நாட்டையும் உள்ளடக்கியது.

ஜூன் 1-ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து தில்லி இதுவரை 43.6 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது. இயல்பை விட இது 42 சதவீத குறைவாகும். இயல்பான அளவு 75.7 மி.மீ. ஆகும். மத்திய தில்லி இயல்பை விட 89 மி.மீ. மழை குறைவாகப் பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கிஸ்த்வருக்குப் பிறகு இந்தியாவில் மழைப்பொழிவு குறைவாக உள்ள மாவட்டமாக மத்திய தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தில்லியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் அதிகரித்திருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை காலையில் இயல்பு நிலையில் மாற்றமின்றி 28 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 39.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 56 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயா நகரில் 40.8 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 39.6 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 39.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது .

ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மாலை 9 மணி அளவில் 214 புள்ளிகளாக பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) இடி மின்னல் இருக்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments