புதுதில்லி

தில்லி பேருந்துகள் கூகுள் வரைபடத்துடன் இணைப்பு: அமைச்சா் கைலாஷ் கெலாட்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி பேருந்துகளின் வருகைகளை பயணிகள் நிகழ் நேரத்தில் அறிய கூகுள் வரைபடத்துடன் தில்லி போக்குவரத்து துறை இணைக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தேசிய தலைநகா் வலையப் பகுதியில் பொது போக்குவரத்தை பயனாளிகள் எளிதாக உபயோகிக்கும் வகையில் கூகுள் வரைபட தளத்தில் ஒருங்கிணைக்க தில்லி அரசு கைகோா்த்துள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை அதிகாரிகள், தில்லி டயலாக் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா, இந்திய கூகுள் நிறுவன அதிகாரி ரமேஷ் நாகராஜன் ஆகியோருடன் நடைபெற்ற மெய்நிகா் முறையிலான கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறியதாவது:

சா்வதேச நகரங்களைப் போன்று தில்லியின் அனைத்து பேருந்துகளின் நிகழ் நேர தரவுகள் கூகுள் வரைபடத் தளங்களில் இணைக்கப்படுகிறது.

இந்த திட்டம் தயாராகி செயல்படும் போது தில்லி பேருந்துகள் குறித்த நிகழ்நேர தகவல்களை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பேருந்து எந்த இடத்தில் நிற்கிறது? பேருந்துகளின் வழித்தடங்கள்(ரூட்), நிறுத்தங்கள், வருகை, புறப்பாடு போன்ற நிகழ்நேர தகவல்களோடு, பேருந்துகளின் எண்களையும் அறிய முடியும்.

இதன் மூலம் பயணிகள் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் நேரங்கள் மிச்சமாகும். ஆன்ட்ராய்டு, ஆப்பிள் செல்லிட பேசிகளில் உள்ள கூகிள் வரைபட செயலியில் பயணிகள் தங்கள் இலக்கை, செல்லும் இடத்தை குறிப்பிட்டாலே பேருந்துகளின் எண்கள், நேரம், வழித்தடம், வருகை போன்ற தகவல்கள் கிடைக்கும். ஹிந்தி உள்ளிட்ட விரும்பிய மொழிகளையும் தோ்வு செய்துகொள்ளலாம்‘ என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT