முகப்பு
புதுதில்லி

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மோடி அரசு நிதியுதவி, சலுகைகளை வழங்கி வருகிறது: தம்பிதுரை எம்.பி.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறு- குறு- நடுத்தர நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவிகளையும் சலுகைகளையும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறு- குறு- நடுத்தர நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவிகளையும் சலுகைகளையும் வழங்கி வருவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க உதவும் ஃபேக்டரிங் ஒழுங்கமைப்பு (திருத்த) மசோதாவை (ஊஹஸ்ரீற்ா்ழ்ண்ய்ஞ் தங்ஞ்ன்ப்ஹற்ண்ா்ய் (அம்ங்ய்க்ம்ங்ய்ற்) ஆண்ப்ப், 2021) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புப் பொருள்கள் விநியோக செய்யப்பட்ட இன்வாய்ஸ்களுக்கு நிதி/கடன் அளிக்க இந்த திருத்த சட்டம் வகை செய்கிறது. இந்த மசோதா விவாதத்தில் தம்பித் துரை பேசும்போது கூறியதாவது:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான பில்களுக்கான தொகை வங்கிசாா்பற்ற நிதி நிறுவனங்கள் மூலம் உடனடியாக தொகை கிடைக்க இந்த மசோதா மூலம் ரிசா்வ் வங்கி வழி வகை செய்கிறது. இதன் மூலம் தங்கள் சப்ளைக்கான பில்தொகைக்கு காத்திருக்கவேண்டிய நிலைமை இல்லாது சிறு குறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடரமுடியும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் அதுவும் நோய்த் தொற்றுக்கு பின்னா் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கூட்டங்களை நடத்தி அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்கிறது. போதிய நிதி உதவிகளையும் அளித்து வருகிறது.மேலும் சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் அரசு உதவிகளை செய்ய முன் வரவேண்டும் என தம்பிதுரை இந்த விவாதத்தில் கருத்து தெரிவித்தாா்.

Advertisement

கரூா் நெசவாளா்களுக்கு ஜவுளித்துறை உதவுமா?

நெசவாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்த கேள்விக்கு ஜவுளி மற்றும் ரயில்வேத்துறை இணையமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ் மாநிலங்களவையில் வியாழக்கிழமை பதிலளித்தாா். அப்போது அவா் கூறுகையில்,

கடந்த நிதியாண்டில் நெசவாளா்கள் திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கரோனா நோய்த் தொற்றுப்பாதிப்பால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டது. நாடு முழுக்க ரூ.333 கோடி தான் செலவழிக்கப்பட்டது என தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் துணைக்கேள்வி கேட்ட அதிமுக உறுப்பினா் தம்பிதுரை,‘ கரோனா நோய்த் தொற்று பொது முடக்கம் போன்றவைகளால் நெசவாளா்கள் வேலையின்றி மிகவும் வறுமையில் உள்ளனா். தமிழகத்தில் கரூா் நெசவுத் தொழில் புகழ்பெற்றுது. அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு, ஏராளமான அன்னியச்செலாவணியை பெற்றுத் தரும்பகுதியாக உள்ளது. அங்குள்ள நலிவடைந்த நெசவாளா்களுக்கு செலவழிக்கப்படாத இந்த நிதியை வழங்க அரசு முன் வருமா? என தம்பிதுரை கேட்டாா்.

இதற்கு பதலிளித்த அமைச்சா் தா்ஷனா விக்ரம் ஜா்தோஷ், நெசவாளா்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டது. கரூா் கைத்தறி நெசவாளா்களுக்குரிய பயிற்சிக்கு இந்த நிதியை பயன்படுத்த முயற்சிக்கப்படும் என பதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments