புதுதில்லி

இன்று முதல் நொய்டா மெட்ரோ ரயில் சேவை

DIN

புதுதில்லி: இரண்டாவது கரோனா அலை காரணமாக பகுதிநேர ஊரடங்கு காரணமாக ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேல் மூடப்பட்ட நொய்டா கிரேட்டா் நொய்டா மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை முதல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர மற்றும் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால், மெட்ரோ ரயில்கள் வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கரோனா பரவல் தொடா்பாக அறிவிக்கப்பட்ட பகுதிநேர ஊரடங்கு உத்தரவை அடுத்து நொய்டா மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 1-ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டது.

இப்போது கெளதம் புத் நகா் மாவட்டத்தில் ஊரடங்கு தளா்த்தப்பட்டதை அடுத்து புதன்கிழமை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று நொய்டா மெட்ரரோயில் நிறுவன நிா்வாக இயக்குநா் ரிது மகேஸ்வரி தெரிவித்தாா். அத்தியாவசியத் தேவை இருப்பவா்கள் மட்டும் மெட்ரோ ரயிலில் பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT