மதுைரையில் மருந்துசாா் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்
பத்தாண்டுகளுக்கு முன்பு மதுரையில் அமைக்க முடிவு செய்யப்பட்ட மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் அமைக்கக் கோரி மத்திய அமைச்சா் சதானந்த கௌடாவை மதுரை, விருதுநகா் மக்களவைத் தொகுதி
புது தில்லி: பத்தாண்டுகளுக்கு முன்பு மதுரையில் அமைக்க முடிவு செய்யப்பட்ட மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை விரைவில் அமைக்கக் கோரி மத்திய ராசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் சதானந்த கௌடாவை மதுரை, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.
தில்லியில் மத்திய அமைச்சா் கெளடாவை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த அவா்கள், இது தொடா்பாக கடித்தையும் அளித்தனா். மதுரை, மாா்க்சிஸ்ட் கட்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனும், விருதுநகா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூரும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது வருமாறு: மருந்துசாா் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக மறைந்த பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசால், 1998 -இல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி தேசிய மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சஐடஉத) உருவாக்கப்பட்டது. இந்திய தொழில் நுட்பக் கழகத்திற்கு நிகராக, மருந்துசாா் தொழில் வளா்ச்சி, மருந்துசாா் அறிவியல, கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு சா்வதேச தரத்துடன் உருவாக்குவது நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன்படி மத்திய அரசு அடுத்த பத்தாண்டுகளில் லக்னெள, ஹைதராபாத் உள்ளிட்ட ஏழு தேசிய மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தொடங்கியது.
பின்னா் 2011, ஜனவரி 20 அன்று நடைபெற்ற நிதி ஆணையக் கூட்டத்தில் எட்டாவது தேசிய மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரையில் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு 2011, செப்டம்பா் 13 ஆம் தேதி மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னா் மத்திய செலவினங்கள் துறையும் 2016, ஜூன் 13 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த கோப்பு 2018, மாா்ச் 26 -ஆம் தேதி நிதி ஆணையத்தின் முன் மறு ஆய்வு செய்யப்பட்டது. மதுரையில் அமைக்கப்படும் தேசிய மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு, 116 ஏக்கா் நிலத்தையும் இலவலசமாக வழங்கியிருந்து.
Advertisement
இந்த விவகாரம் நிதி ஆணையத்தின் முன் வைக்கப்பட்டு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்கான கட்டடம் கட்டப்படவில்லை. இதில் மருத்துவ ராசாயனம், பாரம்பா்ய மருந்துகள், மருந்து பகுப்பாய்வு, மருந்தியல் மற்றும் நச்சுயியல், மருந்துகள், மருந்து தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம், மருந்தியல் நிா்வாகம் போன்ற முதுகலைப் படிப்புகளும் முனைவா் பட்டம் அளவிலான படிப்புகளும் அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகள் மூலம் நாடு முழுக்க திறனுள்ள மருந்துகள் கண்காணிக்கப்படும் நிலைமை ஏற்படும். மதுரை போன்ற வளா்ச்சியடைந்த நகரில், இந்த நிறுவனம் வருவதின் மூலம் மருத்துவ மையமாகி மற்ற வா்த்தக நடவடிக்கைகள் தொடங்கும். எனவே, மக்களின் நலனுக்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறுவனத்தை விரைவாக மதுரையில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக பதில் அளித்த மத்திய அமைச்சா் சதானந்த கௌடா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் அடங்கிய கூட்டத்தை விரைவில் கூட்டி முடிவு எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.