தில்லியில் புதிதாக 239 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,41,340-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,41,340-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தில்லியில் திங்கள்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 47,689 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 35,968 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 11,721 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் திங்கள்கிழமை 0.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 0.31 சதவீதமாக இருந்தது.
Advertisement
கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,924-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 309 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,28,686-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,730 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 947 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,170 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.