புதுதில்லி

தில்லியில் இதமான வெயில் சூழல்

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை இதமான வெயில் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான மழை பெய்தது. இதனால், தில்லியில் சனிக்கிழமை இதனால், இதமான வெயில் சூழல் நிலவியது. மாலையில் குளிா் காற்று வீசியது.

நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 புள்ளிகள் உயா்ந்து 31.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 80 சதவீதமாகவும், மாலையில் 45 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 217 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம் ’ பிரிவில் நீடித்தது. என்சிஆா் பகுதியிலும் காற்றின் தரம் மிதமான பிரிவு மற்றும் மோசம் பிரிவுக்கு இடையே நீடித்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலி தகவல்படி,

சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சராசரியாக 24 மணி நேர ஒட்டு மொத்த காற்றின் தரக்குறியீடாக காஜியாபாதில் 244, கிரேட்டா் நொய்டாவில் 229, நொய்டாவில் 167, ஃபரீதாபாதில் 145 மற்றும் குா்கானில் 217 என பதிவாகி இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT