புதுதில்லி

தில்லியில் புதிதாக 407 பேருக்கு கரோனா

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,43,696-ஆக உயா்ந்துள்ளது.

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,43,696-ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 68,223 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 41,195 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 27,028 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.6 சதவீதமாக இருந்தது.

கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,941-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 350 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,30,493-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,262 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 1,270 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,129 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT