தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு!
தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 716 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில்
தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 716 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,46,348 ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை 607 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தினசரி பாதிப்பு 716 ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 77,352 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 47,078 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 30,274 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் வெள்ளிக்கிழமை 0.93 சதவீதமாக இருந்தது.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் மேலும் நால்வா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,949 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 471 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,32,230 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,165 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 1,624 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,891 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement