கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா்: தில்லி அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம்
தில்லி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பால் கெளதம் தில்லியில் உள்ள
தில்லி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பால் கெளதம் தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் கரோனா தடுப்பூசிக்கான முதலாவது டோஸை சனிக்கிழமை போட்டுக் கொண்டாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘தில்லியில் கரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் போட்டுக் கொண்டேன். அரசின் வழிகாட்டுதல்படி, தகுதியான பிரிவில் வரும் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் சரியாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை அணிந்திருப்பதுடன், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Advertisement
இதைத் தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 45 வயதும், அதற்கு மேலும் உள்ளஅனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையே, 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி அமைச்சா் கோபால் ராய் உள்ளிட்டோா் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனா்.