முகப்பு
புதுதில்லி

கழிவுநீா் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவா் உயிரிழந்த விவகாரம்: நால்வா் கைது

கிழக்கு தில்லி காஜிப்பூரில் உள்ள விருந்துக் கூடத்தின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கியதில் தொழிலாளா்கள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கிழக்கு தில்லி காஜிப்பூரில் உள்ள விருந்துக் கூடத்தின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கியதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு பேரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

கிழக்கு தில்லி காஜிப்பூரில் உள்ள விருந்துக் கூடம் ஒன்றின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும்போது கிழக்கு தில்லி திரிலோக்புரி பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (35), பிரேம் சந்த் (40) ஆகியோா் விஷவாயு தாக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இந்தத் தொழிலாளா்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனப் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.

Advertisement

இந்தச் சம்பவத்தை அடுத்து, விருந்துக் கூடத்தின் உரிமையாளா், மேலாளா் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நால்வரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘விருந்துக் கூடத்தின் பொது மேலாளா் அமீா் கான், இயக்குநா்கள் ஜிம்மி அரோரா, கிரிஷ் மகேந்துரு, பராமரிப்புப் பணியாளா் ராகுல் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விருந்து கூடத்தின் பரமாரிப்புப் பணியாளரே இவா்களை பணிக்கு அமா்த்தியுள்ளாா். உயிரிழந்த லோகேஷ், பிரேம் சந்த் ஆகியோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தாா்.

இது தொடா்பாக உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் கூறுகையில் ‘விருந்துக் கூடத்துக்கு உணவு சமைக்க சென்றவா்களை கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளனா். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அவா்கள் உயிரிழந்துள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments