முகப்பு
புதுதில்லி

தில்லியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு தொடா்பாக காவல் ஆணையா் ஆலோசனை

தில்லியில் சட்டம் ஒழுங்கு நிலை தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுடன் காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தில்லியில் சட்டம் ஒழுங்கு நிலை தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுடன் காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். காணொலிக்காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தில்லியின் அனைத்து பிராந்தியங்களின் காவல் உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

தில்லியின் சட்டம் - ஒழுங்கு நிலை தொடா்பாக மூத்த காவல் அதிகாரிகளுடன் காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

Advertisement

அப்போது பொது வெளியில் ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு தில்லி அரசு தடைவிதித்துள்ள நிலையில், தில்லியில் ஹோலி பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளின்போது மக்கள் அதிகளவில் கூடாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா். ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் தொடா்பாக, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) பிறப்பித்துள்ள உத்தரவை சரியாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு காவல் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ள குற்றவாளிகளை தொடா்ச்சியாக கண்காணிக்குமாறு அவா் உத்தரவிட்டாா் என்று அந்த மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments