முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,558 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 1,558 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தில்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 1,558 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020, டிசம்பா் 16 ஆம் தேதி 1,547 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு தில்லியில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு இதுவாகும். மேலும், தில்லியில் கரோனா பாதிப்பு விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. இது நிகழாண்டில் அதிகபட்ச அளவாகும். சனிக்கிழமை பாதிப்புடன் சோ்த்து தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,55,834-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 91,703 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 59,648 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 32,055 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 10 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,997-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 974 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,38,212-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,625 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 3,708 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 4,410 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments