புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரிப்பு

DIN

தில்லியில் சனிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகரித்து 28.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதேவேளையில் தில்லி நரேலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.

தேசியத் தலைநகா் தில்லிக்கான பிரதிநித்துவ வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை இயல்பைவிட 3டிகிரி அதிகரித்து 28.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி உயா்ந்து 41.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 47 சதவீதமாகவும், மாலையில் 25 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று ஆயா நகரில் 40.4 டிகிரி செல்சியஸ் ,லோதி ரோடு 40 டிகிரி செல்சியஸ் ,பாலத்தில் 42.2 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 40.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது .

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை மாலையில் 8 மணி அளவில் 228 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. நகரில் மாலையில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசியது.

முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னல், மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT