இலவச ரேஷன் விநியோக திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க தில்லி அரசு முடிவு
தில்லி அரசு அதன் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசு அதன் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. சாமானிய மக்கள் தங்களது ஒரு நாளுக்கான இரண்டு வேளை உணவைக் கூட சமாளிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பலா் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.
பிரதமா் தயவு செய்து ஏழைகளுக்கு இலவச ரேஷன் விநியோகம் செய்யும் திட்டத்தை ஆறு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தில்லி அரசு அதன் இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
மத்திய உணவுத் துறை செயலா் சுதான்சு பாண்டே ஓரிரு தினங்களுக்கு முன்பு தெரிவிக்கையில், ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் இலவச ரேஷன் வழங்கப்படும் திட்டம் நவம்பா் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிப்பதற்கு உத்தேசம் இல்லை’ என்று தெரிவித்திருந்தாா்.
தில்லி அரசு பயனாளிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் -2013 மற்றும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ஆகியவற்றின் கீழ் இலவச ரேஷனை வழங்கி வருகிறது.
தில்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் உள்ளன. 17 லட்சத்து 70 ஆயிரம் ரேஷன் அட்டைதாரா்கள் உள்ளனா். 72 லட்சத்து 78 ஆயிரம் பயனாளிகள் உள்ளனா்.
நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு இலவச ரேஷன் மானிய அடிப்படையில் தானியமாக வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது கரோனா நோய்த் தொற்று காரணமாக இடா்ப்பாட்டு உள்ளவா்களுக்கு உதவுவதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலத்திற்காக தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னா் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் கேஜரிவால் பிரதமா் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாா். அதில், அவா் தெரிவித்திருப்பதாவது:
கரோனா காலத்தின்போது மத்திய அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதாந்திர மானிய உணவு தானியங்களுக்கு மேலே சம அளவிலான இலவச ரேஷனை ரேஷன் அட்டை தாரா்களுக்கு வழங்கியிருந்தது. மத்திய அரசின் திட்டங்களைத் தவிர, தில்லி அரசும் கரோனா நோய்த் தொற்று காலத்திஏன்போது பயனாளிகளுக்காக மாதாந்திர இலவச ரேஷனை அளித்திருந்தது. மத்திய, மாநில அரசுகளின் இந்த உதவி ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தத் திட்டம் நவம்பரில் முடிவடைகிறது. இதை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ஏறு கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.