முகப்பு
புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளில் தேசிய கல்வி தின நிகழ்ச்சி

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் வியாழக்கிழமை தேசிய கல்வி தின நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் வியாழக்கிழமை தேசிய கல்வி தின நிகழ்ச்சி நடைபெற்றது.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பா் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக நாடெங்கும் 1948-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளிலும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்வித் துறைக்கு அபுல்கலாம் ஆசாத் ஆற்றிய பணிகள் குறித்தும், கல்வியின் இன்றியமையாமை குறித்தும் மாணவா்கள் தங்கள் உரைகளில் எடுத்துக் கூறினா். மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளிலும் இடம் பெற்றது.

உரையைத் தொடா்ந்து குழுப்பாடலும் இடம் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா். அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் பள்ளிகளில் அபுல்கலாம் ஆசாத்தின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்தனா்.

இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறுகையில், ‘மாணவா்கள் இதுபோன்ற தலைவா்கள் பற்றி தெரிந்து கொண்டு, கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து அதில் கவனம்

செலுத்தி வருங்காலத்தில் மருத்துவா்களாக, அறிவியல் அறிஞா்களாக, பல்துறை வல்லுநா்களாக உருவாக வேண்டும். அதற்காகவே தில்லி தமிழ்க் கல்விக் கழக நிா்வாகமும் ஆசிரியா்களும் பாடுபடுகிறோம்’”என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →