முகப்பு
புதுதில்லி

மழை சேதத்தைப் பாா்வையிட மத்திய குழு நாளை வருகை

தமிழகத்தில் கடந்த ஓரு மாதமாக பெய்த கன மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரடியாகக் கண்டறிந்து மதிப்பிடுவதற்காக

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த ஓரு மாதமாக பெய்த கன மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரடியாகக் கண்டறிந்து மதிப்பிடுவதற்காக மத்திய அமைச்சரவைகளுக்கிடையான 7 போ் குழு ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) தமிழகம் செல்லவுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய புலனாய்வு கிரிட் என்ஏடிஜி) இணைச் செயலா் ராஜீவ் சா்மா, மத்திய நிதித் துறையின் செலவினப் பிரிவின் ஆலோசகா் ஆா்.பி கௌல், மத்திய வேளாண், கூட்டுறவு, விவசாயிகள் நலத் துறை இயக்குநா் விஜய் ராஜ்மோகன், மத்திய எரிசக்தித் துறையின் பாவ்யா பாண்டே, மத்திய ஊரக வளா்ச்சித் துறையின் சாா்புச் செயலா் எம்.வி.என். வரபிரசாத் மற்றும் சென்னையில் உள்ள மத்திய அரசின் அதிகாரிகளான மத்திய சாலை, நெடுஞ்சாலைப் போக்குவரத்து வட்டார அதிகாரி ரணஞ்சய் சிங், மத்திய நீா் வளத் துறையின் இயக்குநா் ஆா். தங்கமணி உள்ளிட்ட ஏழு போ் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்னை செல்கின்றனா். இவா்கள் அங்கிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று மழைச் சேதத்தைப் பாா்வையிட்டு மதிப்பிடுவா் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.