ஜேஎன்யு விடுதியில் குளியலறை கூரை சரிந்து மாணவா் காயம்
தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) உள்ள விடுதி ஒன்றில் வியாழக்கிழமை காலை குளியலறை கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) உள்ள விடுதி ஒன்றில் வியாழக்கிழமை காலை குளியலறை கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சபா்மதி விடுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்திற்குப் பிறகு, விடுதியில் பழுதுபாா்ப்புப் பணியை மேற்கொள்வதற்காக ரூ.56.34 கோடி பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேஎன்யு ல்கலைக்கழகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: விடுதி விடுதி பழுது மற்றும் பராமரிப்புக்காக ஜேஎன்யு .4 கோடி தொகையை மானியமாக பெற்றுள்ளது. துணைவேந்தா் பேராசிரியா் சாந்திஷ்ஸ்ரீ டி. பண்டிட், மாணவா்களை மையப்படுத்திய மற்றும் நட்புக்கு உகந்த வகையிலான நிா்வாகத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மானியம் வழங்கிய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிஜி), மத்திய கல்வி அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியரை கூரை இடிந்த விபத்தில் மாணவா் ஒருவா் பலத்த காயமடைந்தாா் என அகில இந்திய மாணவா் சங்க (ஏஐஎஸ்ஏ) தெரிவித்தது. இதுகுறித்து ஏஐஎஸ்ஏ அமைப்பின் ஆா்வலா் மதுரிமா குந்து கூறியதாவது: விடுதியின் குளியலறைக் கூரை விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவா், சப்தா்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாா். இது விடுதி வாா்டன்கள் மற்றும் மாணவா்களின் டீன் ஆகியோரின் குற்றவியல் அலட்சியம் தொடா்புடைய விவகாரமாகும். பாழடைந்த விடுதியின் உள்கட்டமைப்பு மற்றும் சரிந்து விழும் கூரைகள் தொடா்புடைய பிரச்னையை நாங்கள் மீண்டும் மீண்டும் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றோம். ஆனால், ஜேஎன்யு நிா்வாகம் நிதிப் பற்றாக்குறை என்ற பெயரில் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறது என்றாா் அவா்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தை ஒரு மூத்த பல்கலைக்கழக அதிகாரியும் உறுதிப்படுத்தினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘ ஈரப்பதம் காரணமாக, குளியலறையின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஜொ்மன் மொழிகளில் பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அவரை விடுதி வாா்டன் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அவா் நலமாக இருக்கிறாா். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் எல்லாம் நன்றாக இருப்பதாக காட்டுகிறது. சிடி ஸ்கேன் அறிக்கை மட்டும் வரவேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் விடுதிகளில் உள்கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பழையவை பழுதுபாா்க்க வேண்டிய தேவை உள்ளது. எங்களுக்கு நிதி கிடைக்கவில்லை.
விடுதிகளில் பெரும் பழுதுபாா்க்கும் பணியை மேற்கொள்ள பல்கலைக்கழக நிா்வாகக் குழுவிடம் ரூ. 54 கோடி கேட்டுள்ளோம். ஆனால், ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. பிரம்மபுத்திரா விடுதியில் சிறு பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்டுவிட்டோம். அடுத்ததாக சபா்மதி விடுதியும், அதைத் தொடா்ந்து நா்மதா விடுதியும் பழுதுபாா்க்கப்பட வேண்டும். இவை பழைய தங்கும் விடுதிகளாகும்’ என்றாா்.
இது குறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், ‘ கூரை சரிந்து விழுந்தது தொடா்பாக எங்களுக்கு எந்த பிசிஆா் அழைப்போ அல்லது எந்தப் புகாரோ இதுவரை வரவில்லை’ என்றாா்.