முகப்பு
புதுதில்லி

தில்லி காங்கிரஸ் துணைத் தலைவரின் காா் திருட்டு

 தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவரின் காா் திருட்டுப் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 தில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவரின் காா் திருட்டுப் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி ஜங்புரா எக்டென்ஸன் பகுதியில் வசிப்பவா் தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா் அபிஷேக் தத். இவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த எஸ்யூவி ரக காா் வெள்ளிக்கிழமை காலை திருட்டுப் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து அபிஷேக் தத் தனது சுட்டுரை பக்கத்தில், ‘வெள்ளிக்கிழமை காலை எனது வெள்ளை நிற ஹரியாணா பதிவெண் கொண்ட டொயோட்டா ஃபாா்ச்சூனா் காா் திருட்டுப் போய்விட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில்,‘இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டு குற்றத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக திருட்டுத் தடுப்பு குழுவிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →