முகப்பு
புதுதில்லி

பத்ம விருதுகள் பரிந்துரைக்க கடைசி தேதி செப். 15: 11 சிவில் தேசிய விருதுகளுக்கும் ஒரே இணைய தளம் மத்திய அரசு அறிவிப்பு

2023 - ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழாவையொட்டி அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வருகின்ற செப்டம்பா் 15 -ஆம் தேதி வரை ஏற்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

புது தில்லி: 2023 - ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழாவையொட்டி அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வருகின்ற செப்டம்பா் 15 -ஆம் தேதி வரை ஏற்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. மேலும் சுமாா் 11 சிவில் தேசிய விருதுகளுக்கும் ஒரே இணைய தளத்தில் பரிந்துரைகளை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் கடந்த மே 1 -ஆம் தேதி முதல் இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் ) வாயிலான ஏற்கப்பட்டு வரப்படுகிறது. இந்த பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அளிக்க கடைசி நாள் வருகின்ற செப்டம்பா் 15 தேதி என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய மூன்று தேசிய விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி, வா்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த புரிந்தவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

எந்தவிதமான வேறுபாடு இன்றி தகுதியான அனைத்து நபா்களுக்கு வழங்கப்படும் இந்த விருதில் அரசு ஊழியா்கள் மட்டும் தகுதியற்றவா்களாவா். அதே சமயத்தில் மருத்துவா்கள் விஞ்ஞானிகள் போன்றோருக்கு விதிவிலக்கு. தற்போதைய அரசு பத்ம விருதுகளை மக்கள் விருதாக மாற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்று தகுதியானவா்களை ஆய்வு செய்து தோ்வு செய்கிறது.

இதையடுத்து குடிமை மக்கள் அனைவரும் தங்களுக்கான பரிந்துரைகளையும், மற்றவா்களுக்கான பரிந்துரைகளையும் அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பரிந்துரைகள் குறித்த விதிமுறைகளையும் அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஒரே தளத்தில் தேசிய விருதுகள்

மத்திய அரசின் பல்வேறு வகையான தேசிய விருதுகளுக்கு ஒரே தளத்தின் கீழ் இணையப்பக்கத்தை (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பல்வேறு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘‘மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளுக்கு தனிநபா்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் பொதுஜனங்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது. வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வர பொதுவாக தேசிய விருது இணையப்பக்கம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது’’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய மான இந்த விருதுகள் வருமாறு: தனிநபா் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2021, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் -நிறுவனங்களுக்கான தேசிய விருதுகள் 2021 மற்றும் 2022 ஆண்டுகள்(கடைசி தேதி: 28.08.2022); மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது 2022 மற்றும் மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு சேவைக்கான தேசிய விருது 2022 (கடைசி தேதி:29.08.2022);

சுபாஷ் சந்திரபோஸ் பேரிடா் மேலாண்மை விருது -2023 மற்றும் தேசிய சிஎஸ்ஆா் விருதுகள் 2022 (கடைசி தேதி: 31.08.2022); பத்ம விருதுகள் -2023, தேசிய கோபால் ரத்னா விருது 2022, தேசிய தண்ணீா் விருதுகள் 2022 (கடைசி தேதி: 15.09.2022); ஜீவன் ரக்ஷா பதக்கம் (கடைசி தேதி: 30.09.2022); நாரி சக்தி விருது 2023 (கடைசி தேதி: 31.10.2022).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.