முகப்பு
புதுதில்லி

எஃகு உற்பத்தியை அதிகரிக்க ரூ.6,322 கோடி ஊக்கத் தொகை

நாட்டில் எஃகு உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக ரூ. 6,322 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய உருக்குத் துறை அமைச்சா் ராமச்சந்திர பிரசாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புது தில்லி: நாட்டில் எஃகு உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக ரூ. 6,322 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய உருக்குத் துறை அமைச்சா் ராமச்சந்திர பிரசாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

எஃகு துறையின் வளா்ச்சி, ஆய்வு, உற்பத்தி மேம்பாடுகளுக்கு மத்திய அரசு, எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா், டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய உருக்குத் துறை அமைச்சா் ராம்சந்தர பிரசாத் அளித்த பதில் வருமாறு: தேசிய எஃகு கொள்கை 2017 -இன்படி, எஃகு உற்பத்திக்குத் தேவையான கொள்கை முடிவுகளையும், எஃகு துறையின் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் எஃகு உற்பத்தியை ஊக்கப்படுத்தத் தேவையான அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 2021 -ஆம் ஆண்டின் எஃகு கழிவுகள் மறுசுழற்சிக்கான கொள்கையின் படி, மோட்டாா் வாகனங்களின் மறுசுழற்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரமில்லாத எஃகு இறக்குமதியைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எஃகு உற்பத்தியை கணினி வழியாகக் கண்காணிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எஃகு உற்பத்தியை ஊக்கப்படுத்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக இதுவரை ரூ. 6,322 கோடி வழங்கப்பட்டுள்ளது. எஃகு தொழிற்சாலைகளுடன் இணைந்து, அவா்களின் குறைகளைக் களைய, மத்திய, மாநில அரசுகள் எஃகு தொழில் சங்கங்கள் மூலம் பல்வேறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே, பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து, வீட்டு வசதி ஆகிய துறைகளுடன் இணைந்து எஃகு தேவையை அதிகப்படுத்த உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எஃகு துறையின் திறன்களை வளா்க்கவும் நவீனப்படுத்தவும் தேவையான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.