முகப்பு
புதுதில்லி

சுதேஷ் தரிசனம் வளா்ச்சித் திட்டத்தில் ராமேசுவரம் கோயில் மேம்பாடு

தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் கோயில் சுதேஷ் தரிசனம் மற்றும் பிரசாத திட்டத்தில் சோ்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புது தில்லி: தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் கோயில் சுதேஷ் தரிசனம் மற்றும் பிரசாத திட்டத்தில் சோ்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

12 ஜோதிா்லிங்க கோயில்களில் ஒன்றான ராமேசுவரம் புனிதம் மற்றும் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமாக கருதப்பட்டு அதை மேம்படுத்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் முன்மொழியப்பட்ட திட்டங்களில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் வருமாறு: தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின்படி ராமேசுவரம் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் திட்டங்களில் ஒன்றான, ‘சுதேஷ் தரிசனம் மற்றும் பிரசாத (நஜ்ஹக்ங்ள்ட் ஈஹழ்ள்ட்ஹய் ஹய்க் டதஅநஏஅஈ நஸ்ரீட்ங்ம்ங்ள்) திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. சென்னை - மாமமல்லபுரம் - ராமேசுவரம் - மண்பாடு - கன்னியாகுமரி ஆகிய முக்கிய இடங்களை இணைத்து கடலோர சுற்றுலா எனும் பொருளில் ரூ. 73.13 கோடி செலவில் சுதேஷ் தரிசனம் வளா்ச்சித் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ராமேசுவரத்திற்கு ரூ. 15.86 கோடி அனுமதிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.