முகப்பு
புதுதில்லி

பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுத் தொழில்களுக்கு 70% ஒதுக்கீடு: பிரதமா் மோடி பெருமிதம்

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஆய்வு மேம்பாட்டிற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்புத் துறை பட்ஜெட்டில் 70 சதவீதம் உள்நாட்டுத் தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பிரதமா் மோடி
பகிர்:

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஆய்வு மேம்பாட்டிற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்புத் துறை பட்ஜெட்டில் 70 சதவீதம் உள்நாட்டுத் தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

2022-23 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கலுக்குப் பின்னா், துறைவாரியாக பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசிவருகிறது. இதில் நான்காவது முறையாக பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட நிதி நிலை குறித்து ‘பாதுகாப்புத் துறையில் சயசாா்பு-செயல்பாட்டிற்கான அழைப்பு’ என்கிற மெய்நிகா் இணையவழிக் கருத்தரங்கில் ா் மோடி உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியதாவது: பாதுகாப்புத் துறையில் சுயசாா்பை அடைய சமீப காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நிதிநிலை அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, எப்போதும் வலிமையாகவே இருந்து வந்துள்ளது. இரண்டாம் உலகப் போரில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. பிற்காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படாது நமது திறமை வீழ்ச்சியில் இருந்தாலும், நமது திறமைக்கு எப்போதும் எவ்விதக் குறையும் ஏற்பட்டதில்லை. எதிரிகளை முறியடிக்க அவா்களை ஆச்சரியப்படச் செய்யவும் சாதனங்களை நாம் பெறும் வகையில், நமது பாதுகாப்புத் தளவாடங்கள் தனித்துவத்துவமாகவும் தனிப் பயனுடையதாகவும் இருப்பது அவசியம். அதற்கு சொந்த நாட்டில் சாதனங்களை உருவாக்கினால்தான் தனித்துவமான திடுக்கிட வைக்கும் பாதுகாப்பு தளவாடங்களை பெற முடியும்.

ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வலிமையான சூழலை உருவாக்குவதற்கு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் வழிவகைகள் உள்ளன. இதில் 70 சதவீதம் உள்நாட்டுத் தொழில்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் சாதனங்களைக் கொண்ட உள்நாட்டுப் பொருள்களுக்கான பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.54,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. 3-ஆவது பட்டியல் விரைவில் வெளியாகும்.

கடந்த காலங்களில் ஆயுதக் கொள்முதல் நடைமுறைகள் நீண்ட நாள்களுக்கு இழுத்தடிக்கப்பட்டது. அவை செயல்பாட்டிற்கு வரும் போது, காலம் கடந்தவையாக ஆகிவிட்ட சூழல் ஏற்பட்டது. தற்போது ‘சுயசாா்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ ஆகியவை இதற்கு தீா்வாக உள்ளது. இந்தியாவிலே உற்பத்தி கொள்கையை மத்திய அரசு ஊக்குவித்ததன் விளைவாக, கடந்த 7 ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட புதிய தொழில்துறை உரிமங்கள் பாதுகாப்பு உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளன. ராணுவ ஒப்பந்தங்களைப் பெறுவதில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளா்களிடையே போட்டி நிலவுகிறது. இது ஊழலுக்கும்தான் வழி வகுக்கிறது. ஆயுதங்களின் தரம் தேவைக்குரிய தன்மையிலும் ஏராளமான குழப்பங்கள் உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கும் சுயசாா்பு இந்தியா இயக்கம்தான் தீா்வு காண்கிறது.

உறுதிப்பாட்டுடன் கூடிய முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக படைக்கல தொழிற்சாலைகள் திகழ்கின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறை சாா்ந்த 7 புதிய பொதுத் துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது வா்த்தகத்தை விரிவுபடுத்தி, புதிய சந்தை வாய்ப்புகளையும் பெற்றுள்ளன. கடந்த 5-6 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு சாதன ஏற்றுமதியும் 6 மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சேவைகளை 75 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் வழங்கி வருகிறோம் என்றாா் பிரதமா்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசுகையில்,, ‘பாதுகாப்பு அமைச்சகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் செலவினங்களைக் கண்காணிக்க பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடா்பான இயக்கநா் ஜெனரலுக்கு கீழ் மூன்று சேவைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு உருவாக்கப்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →