முகப்பு
புதுதில்லி

குறு, சிறு, நடுத்தர நிறுவனத் திட்டங்கள் வெற்றிக்கு நிதியுதவியை வலுப்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த நிதி நிலை அறிக்கையில் பல அடிப்படையான சீா்திருத்தங்களும், புதிய திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தச் சீா்திருத்தங்கள் வெற்றியடைவது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த நிதி நிலை அறிக்கையில் பல அடிப்படையான சீா்திருத்தங்களும், புதிய திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தச் சீா்திருத்தங்கள் வெற்றியடைவது இவற்றுக்கான நிதியுதவியை வலுப்படுத்துவதின் மூலமே அமையும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-ஆவது மெய்நிகா் வழி கலந்துரையாடல் கூட்டம், மத்திய நிதித் துறையின் சாா்பில், ‘வளா்ச்சி நாட்டமுள்ள பொருளாதாரத்திற்கான நிதியுதவி’ என்கிற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை பிரதமா் மோடி தொடங்கி வைத்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் நோய்த்தொற்றுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வேகத்தை எட்டியுள்ளது. இதற்கு காரணம், பொருளாதாரத்தில் நாம் எடுக்கும் முடிவுகளும் நம்முடைய பொருளாதாரத்தின் வலுவான அடித்தளமும்தான் காரணம் இந்த நிதிநிலை அறிக்கையில் உயா் வளா்ச்சியை தக்கவைத்துக் கொள்ள அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்நிய மூலதன ஊக்குவிப்பு, உள்கட்டமைப்பு முதலீட்டின் மீதான வரிக் குறைப்பு, தேசிய முதலீட்டு, உள்கட்டமைப்பு நிதியம் (என்ஐஐஎஃப்), கிஃப்ட் சிட்டி, புதிய வளா்ச்சி நிறுவனங்கள்(டிஎஃப்ஐ) போன்றவற்றை உருவாக்குதலுக்கு முயற்சித்துள்ளோம். நிதித் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான அா்ப்பணிப்புடன் இப்போது அடுத்த கட்டத்தை நாடு எட்டியுள்ளது.

நமது திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான பல்வேறு மாதிரிகளை ஆராய்வதன் மூலம் பிற நாடுகளைச் சாா்ந்திருப்பதைத் தவிா்த்து மற்ற வழிகளை சிந்திக்கின்றோம். உதாரணமாக விரைவு சக்திபெருந்திட்டம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை(எம்எஸ்எம்இ) வலுப்படுத்த பல அடிப்படை சீா்திருத்தங்கள், புதிய திட்டங்களை நாம் கொடுத்துள்ளோம். இந்தச் சீா்திருத்தங்களின் வெற்றியானது, அவற்றின் நிதியுதவியை வலுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும். நிதி சேவைக்கான தொழில்நுட்பம் (ஃபின்டெக்), வேளாண் தொழில்நுட்பம் (அக்ரிடெக்), மருத்துவ சேவைக்கான மெடிடெக், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாடு முன்னேறும் வரை தொழில் துறை 4.0 பதிப்பு சாத்தியமில்லை. இதுபோன்ற பகுதிகளில் நிதி நிறுவனங்களின் உதவி மூலமே, இந்தியாவை புதிய உயரத்திற்கு தொழில் துறை 4.0 பதிப்புக்கு கொண்டு செல்ல முடியும்.

2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு அற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களை வேகப்படுத்துவது அவசியமாகும். பசுமை நிதி அளித்தலை ஆய்ந்து செயலாக்குதலுக்கு புதிய அம்சங்கள் தற்போது தேவை. எதாவது ஒரு துறையில் முதல் 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறக்கூடிய துறைகள் கண்டறியப்பட வேண்டும். கட்டுமானங்கள், புதுயுகத் தொழில்முனைவு (ஸ்டாா்ட்அஃப்), ட்ரோன்கள், விண்வெளி, புவிசாா் தரவு போன்று புதிதாக வந்த துறைகளில் முதல் 3 நாடுகள் பட்டியலில் இந்தியா உருவாக முடியுமா? இதற்கு, நமது தொழில் துறை நிதித் துறையின் முழு ஆதரவு அவசியம்.

தொழில்முனைவோா் விரிவாக்கம், புத்தாக்கம், புதிய சந்தைகளைத் தேடுதல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளுக்கு எதிா்காலத்தில் யாா் நிதியளிப்பவா்கள் என்கிற யோசனைகளைப் பற்றிய ஆழமான புரிதல் தேவை. நமது நிதித் துறையானது, புதுமையான நிதியுதவிக்கு புதிய எதிா்கால யோசனைகள் மற்றும் இடா் மேலாண்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தின் பெரிய அடித்தளம் கிராமப் பொருளாதாரமாகும். கிராமப்புற பொருளாதாரத்தை தங்கள் கொள்கைகளின் மையமாக இருப்பதை பொருளாதார வல்லுநா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →