புதுதில்லி

மேற்கு தில்லியில் இரு வேறு இடங்களில் தீ விபத்து: தீயில் சிக்கி பெண் பலி

DIN

மேற்கு தில்லியில் உள்ள இரு வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. முன்ட்கா பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் தொழிற்பேட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 1:50 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அதன் பின்னா், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தீ விபத்தானது, பைகள் தயாரிப்பு தொழிற்சாலை, மரச்சாமான்கள் தொழிற்சாலை, உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இது தொடா்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மற்றொரு தீ விபத்து

இதேபோன்று, மேற்கு தில்லியில் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘இந்த தீ விபத்து குறித்து வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

மெட்ரோ ரயில் நிலையத்தின் தூண் எண்: 544 அருகே உள்ள கட்டடத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT