வீட்டின் கட்டுமானம் இடிந்து தொழிலாளி சாவு: 2 போ் காயம்
மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் கட்டுமானப் பணியின் போது, வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 24 வயது தொழிலாளி உயிரிழந்தாா்.மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் கட்டுமானப் பண
மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் கட்டுமானப் பணியின் போது, வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 24 வயது தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக மாலை 5.24 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து புகா்ப்பகுதி காவல் சரக துணை ஆணையா் சமீா் சா்மா கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்ததாா். மேலும் இருவா் காயமடைந்தனா். இந்த வீடு முண்ட்காவின் ஃபிா்னி சாலையில் அமைந்துள்ளது. கபில் என்பவருக்குச் சொந்தமான இந்த இடத்தில், 250-300 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டடம் கட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பிரேம் நகா் 11-இல் வசித்து வந்த மனாஸை, தனது உறவினா் சுபாஷுடன் நங்லோயில் உள்ள சோனியா காந்தி மருத்துவமனைக்கு கபில் அழைத்துச் சென்றாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும், முண்ட்காவில் உள்ள பகத் சிங் பூங்காவில் வசிக்கும் கரீப் ஷா (54) மற்றும் அவரது மகன் சச்சின் குமாா் என அடையாளம் காணப்பட்டனா்.. அவா்கள் எஸ்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா், அங்கு அவா்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.