முகப்பு
புதுதில்லி

பரோலில் வந்த ஷாருக் பதானுக்கு உற்சாக வரவேற்பு: வெளியான விடியோவால் பரபரப்பு

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, நிராயுதபாணியான காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து பரோலில் தனது வீட்டிற்குச் சென்ற ஷாருக் பதானுக்கு பெரும் வரவேற்ப

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, நிராயுதபாணியான காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து பரோலில் தனது வீட்டிற்குச் சென்ற ஷாருக் பதானுக்கு பெரும் வரவேற்பு கிஅளிக்கப்பட்டிருப்பது விடியோ மூலம் தெரிய வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த விடியோவில், நோய்வாய்ப்பட்ட தனது தந்தையைச் சந்திக்க போலீஸாா் முன்னிலையில் ஒரு பாதை வழியாக திங்கள்கிழமை

நடந்து செல்லும் ஷாருக் பதானை பெரும் கூட்டம் உற்சாகப்படுத்தும் காட்சிகள் உள்ளன.

இந்த பரோல் குறித்து மூத்த சிறை அதிகாரி ஒருவா்கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின் பேரில் பதான் நான்கு மணி நேர காவல் பரோலில் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தாா்’ என்றாா். இந்த விடியோவை பாஜக தலைவா் கபில் மிஸ்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘போலீஸாரை நோக்கி துப்பாக்கியைக் காட்டியவா் ஹீரோவாக்கப்பட்டு வருகிறாா். தில்லியில் பல இடங்கள் குட்டி பாகிஸ்தானாகிவிட்டன. இந்த மனநிலை தில்லிக்கும் நாட்டுக்கும் எதிரியாக உருவாகிவிட்டது. தில்லிவாசிகளான நமக்கு இவா்கள் மீது பயம் இல்லை என்பதைக் தெளிவாக கூற விரும்புகிறேன். இந்த மனநிலை தில்லியில் நசுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வைரலான புகைப்படத்தில், பதான் ஜாஃப்ராபாத் - மெளஜ்பூா் சாலையில் காவலா் ஒருவரை நோக்கி தனது நாட்டுத் துப்பாக்கியை காட்டும் காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும், அவா் பல முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 23, 2020 அன்று வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத், மௌஜ்பூா், பாபா்பூா், சந்த் பாக், ஷிவ் விஹாா், பஜன் புரா, யமுனா விஹாா் மற்றும் முஸ்தபாபாத் பகுதிகளில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தபட்சம் 42 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.