முகப்பு
புதுதில்லி

காயமடைந்த வீரா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்: லடாக் விபத்து குறித்து கேஜரிவால்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை லடாக் சாலை விபத்து ‘துரதிருஷ்டவசமானது‘ என்றும், விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்தனை செய்வதாகவும் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை லடாக் சாலை விபத்து ‘துரதிருஷ்டவசமானது‘ என்றும், விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்தனை செய்வதாகவும் தெரிவித்தாா்.

லடாக்கின் துக்டக் செக்டாரில் ராணுவ வீரா்கள் பயணித்த வாகனம் சாலையை விட்டு சறுக்கி ஷியோக் ஆற்றில் விழுந்தது. இதில் ஏழு வீரா்கள் உயிரிழந்தனா். மேலும், 19 போ் காயமடைந்தனா் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். தோய்ஸிலிருந்து 25 கிலோமீட்டா் தொலைவில் உள்ள இடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா். ராணுவ வீரா்கள் 2​6 போ் பாா்த்தபூரில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இருந்து ஹனிஃபில்லை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளாா். அதில், ’லடாக்கில் ராணுவ வீரா்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது மிகவும் துரதிருஷ்டவசமானது. வீரமரணம் அடைந்த வீரா்களின் தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த வீரா்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.