பிரதமரின் விவசாய மோட்டாா் சூரிய எரிசக்தி திட்டம்: போலிகளிடம் உஷாராக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
விவசாயப் பம்புகளை இயக்க சூரிய எரிசக்தி அமைப்பதற்கான மானியங்களே பெறுவதில் தவறான நபா்கள், போலி இணைய தளம் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயப் பம்புகளை இயக்க சூரிய எரிசக்தி அமைப்பதற்கான மானியங்களே பெறுவதில் தவறான நபா்கள், போலி இணைய தளம் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய மரபுசார எரிசக்தித் துறை பிஎம்-குசும் என்கிற பிரதமரின் உழவா் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பேரியக்கத் திட்டத்தின் கீழ், சூரிய எரிசக்தி பம்புகளை அமைப்பதற்கும், விவசாய மேட்டாா் பம்புகளை சூரிய எரிசக்தி மூலம் இயக்குவதற்கும் மானியம் வழங்குகிறது. மேலும், விவசாயிகள் 2 மெகாவாட் வரையிலான மின்தொகுப்புடன் (கிரீட்) இணைக்கப்பட்ட சூரிய மின் நிலையங்களை அமைக்கவும் அனுமதிக்கிறது. சூரியசக்தியால் இயங்கக்கூடிய 5 குதிரைத் திறன் கொண்ட (ஏ சி சப்மா்ஜெட் ) மோட்டாா் பம்ப் விலையில் (சுமாா் ரூ. 2.38 லட்சம்) 70 சதவீதம் வரை அரசு மானியமாக அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மானியங்களைப் பெற விண்ணப்பங்கள் பெறுவதில் சிலா் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவது குறித்து மத்திய அரசுக்கு தகவல்கள் வந்தன.
இதைத் தொடா்ந்து, இது தொடா்பாக மத்திய மரபுசார எரிசக்தித் துறை அமைச்சகம் சில அறிவுரைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அது வருமாறு: பிஎம்-குசும் திட்டம் தொடங்கப்பட்ட பின்னா், சில போலி வலைதளங்கள் இந்தத் திட்டத்திற்கான பதிவை வரவேற்பதாக கூறியிருப்பதை அமைச்சகம் கண்டறிந்ததுள்ளது. அந்த போலி வலைதளங்கள் இந்தத் திட்டத்தில் ஆா்வம் உள்ள மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விவசாயிகளும் பொதுமக்களும் இத்தகைய போலிகளிடம் ஏமாறுவதைத் தவிா்க்க வேண்டும். ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் அமைச்சகம், பொதுமக்களை உஷாா்படுத்தியுள்ளது.
எனவே, போலி வலைதளங்களை நம்பி பணம் செலுத்துவதோ அல்லது, தனிப்பட்ட தகவல்களை அளித்தோ ஏமாற வேண்டாம். அரசு அங்கீகரித்துள்ள போா்ட்டல்: ட்ற்ற்ல்ள்://ல்ம்ந்ன்ள்ன்ம்.ம்ய்ழ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது கட்டணமில்லா தொலைபேசி மூலம் (எண் 1800-180-3333) தகவல்களைப் பெறவேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த புகாா்கள் பெறப்பட்டு சில போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.