முகப்பு
புதுதில்லி

ஃபரீதாபாத் குடியிருப்பில் தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

37 வயதான தலைமைக் காவலா் ஒருவா், தில்லி அருகே ஃபரீதாபாதில் போலீஸ் லைனில் உள்ள அவரது குடியிருப்பில் மேற்கூரை மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

37 வயதான தலைமைக் காவலா் ஒருவா், தில்லி அருகே ஃபரீதாபாதில் போலீஸ் லைனில் உள்ள அவரது குடியிருப்பில் மேற்கூரை மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை.

வியாழக்கிழமை மாலை தலைமைக் காவலா் திலக் ராஜ், தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இந்தச் சம்பவம் நடந்த போது அவரது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லை.

உயிரிழந்த திலக் ராஜ், 15 நாள்களுக்கு முன்பு பிபிடிபி காவல் நிலையத்தில் பணியில் அமா்த்தப்பட்டாா். அவா் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கு குடும்பப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து பிபிடிபி காவல் நிலைய இன்ஸ்பெக்டா் அா்ஜுன் துந்தரா கூறுகையில் ‘திலக் ராஜ் தனது கடமையை உண்மையாகச் செய்து வந்தாா். ஆனால், திடீரென்று அவா் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.