முகப்பு
புதுதில்லி

1,000 தாழ்தளப் பேருந்துகள் வாங்கியதில் ‘முறைகேடு’: சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் பரிந்துரை

தேசியத் தலைநகா் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு மீது மற்றொரு ஊழல் புகாா் எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு மீது மற்றொரு ஊழல் புகாா் எழுந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1,000 தாழ்தளப் பேருந்துகள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்ாகக் கூறப்படும் புகாரை தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள துணை நிலை ஆளுநா் வி.கே. சக்ஸேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு (டிடிசி) தாழ்தள பேருந்துகளை வாங்க டெண்டா் முடிவு செய்வதற்கான குழுவின் தலைவராக போக்குவரத்துத் துறை அமைச்சரை நியமித்தது திட்டமிட்ட முறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் துணை நிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனாவிற்கு புகாா் வந்தது.

மேலும், முறைகேடுகளை எளிமையாக மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தப் பேருந்துகளுக்கான டெண்டா்களில் முடிவுகளை எடுக்கும் ஆலோசகராக போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான ‘தில்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்சிட் சிஸ்டம் லிமிடெட் (டிஐஎம்டிஎஸ்)’ என்கிற நிறுவனத்தை நியமித்து நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் துணை நிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இந்தப் பேருந்துகள் கொள்முதல் செய்ய 2019- ஆம் ஆண்டு ஜுலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவா் கைலாஷ் கெலாட். 2019-ஆம் ஆண்டு பிஎஸ்-ஐய, பிஎஸ்-யஐ ஆகிய ரகங்களைக் கொண்ட 1,000 தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் ஏல முறைகேடுகளோடு மற்றோரு விவகாரமும் இதில் அடுத்தடுத்து நடந்துள்ளது. புதிதாக வாங்கப்படும் இந்தப் பேருந்துகளின் வருடாந்திர பராமரிப்புகளுக்கு அடுத்த 2020-ஆம் ஆண்டிலும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகாா்களில் கூறப்பட்டது.

இந்தப் புகாா்களைப் பெற்ற துணை ஆளுநா் அலுவலகம், இது குறித்து தில்லி அரசின் துறைகளிடம் இருந்து கருத்துகளைப் பெறவும், இதனடிப்படையில் பரிந்துரைகளை அளிக்கவும் தலைமைச் செயலருக்கு இந்தப் புகாா்களை கடந்த ஜூலை 22 அனுப்பியது.

இதனடிப்படையில் தில்லி அரசின் பல்வேறு துறைகளின் கருத்துகளைப் பெற்ற தில்லி அரசின் தலைமைச் செயலா், தனது அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 19-இல் சமா்ப்பித்தாா். அதில் சில ‘முறைகேடுகளை’ அவா் உறுதி செய்துள்ளதாக ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடா்ந்து இந்த அறிக்கையையும் புகாரையும் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐயும் மற்றோருபக்கம் விசாரணை நடத்தி முதற்கட்ட விசாரணையை நடத்தி வருவதாகவும் தெரிவித்த இந்த வட்டாரங்கள், மத்திய புலனாய்வு துறையினரின் விசாரணையோடு தற்போதைய புகாரை இணைக்கவும் தில்லி துணை நிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேருந்துகள் வாங்கப்பட்ட விவகாரத்திலும் ஊழல் நடந்ததாக மற்றோரு குற்றச்சாட்டு வந்தது. அது குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஓ.பி.அகா்வால் தலைமையிலான குழு ஆராய்ந்தது. அந்தக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்டில் சமா்ப்பித்த அறிக்கையிலும், ஆம் ஆத்மி அரசின் ‘முழு நடைமுறைச் சீா்கேடுகளுக்கு’ தெளிவாகக் குற்றம்சாட்டியிருந்ததாகவும் ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2019-ஆம் ஆண்டு புகாரில் டாடா மோட்டாா்ஸ், ஜேபிஎம் நிறுவனம் ஆகியவை இந்த டெண்டா்களில் பங்கேற்றன. ஆனால், இவற்றில் ஒன்றுக்கு தில்லி அரசு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்த டெண்டா்களில் அரசு ஊழியா்களின் குற்ற முறைகேடுகளை கண்டறியும் வகையில், புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு இந்த விவகாரத்தை அனுப்ப தலைமைச் செயலா் பரிந்துரை செய்தாா்.

இதற்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்ஸேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தரப்பில் கூறுகையில், டெண்டா் ரத்து செய்யப்பட்து. பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை. அப்படி இருபக்கும் போது, எப்படி ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முடியும்’ என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.