முகப்பு
செய்திகள்

சுபம்... 707 நாள்களில் நிறைவடைந்த சக்திவேல் தொடர்!

சக்திவேல் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 30 மார்ச், 2026 at 7:52 AM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் 707 நாள்களுடன் நிறைவடைந்தது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் சக்திவேல். இந்தத் தொடர் கடந்த 2023 டிசம்பர் 4 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும், இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தனது உரிமைகளுக்காகப் போராடும் நாயகி, ரெளடியை(நாயகன்) திருமணம் செய்துகொண்டு, நாயகி சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.

சக்திவேல் தொடரின் முதல் பாகம் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், நாயகன் சிறைக்குச் செல்வதுபோல, காட்சியமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த அக். 21 ஆம் தேதி முதல் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம், 7 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ரெளடியாக இருந்த நாயகன் திருந்தி வாழ முயற்சி செய்கிறார். இதனால், இவர் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

முதல் பாகத்தில் வேலன் பாத்திரத்தில் பிரவீன் ஆதித்யா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விக்ரம் ஸ்ரீ நடித்திருந்தார். தேனம்மை பாத்திரத்தில் நடித்த விஜே சந்தியாவுக்குப் பதிலாக, சஹானா நடித்திருந்தார்

இந்த நிலையில், சக்திவேல் தொடரில் வேலுவும் சக்தியும் இணைவதுபோல, காட்சியமைக்கப்பட்டு, பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகளுடன் கடந்த சனிக்கிழமை 707 நாள்களுடன் நிறைவடைந்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் நிறைவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக பகல் 1.30 மணிக்கு தனம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

summary

The second season of the series Shakthivel, which aired on Vijay TV, concluded after 707 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.