எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவடைந்த ஆடுகளம் தொடர்!
டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் தொடர் நிறைவடைந்தது.
நடிகை டெல்னா டேவிஸ், சல்மானுல் பாரிஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த தொடர் ஆடுகளம். இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆடுகளம் தொடர் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நான் பிரைம் எனப்படும் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கிளைமேக்ஸ் காட்சிகளுடன் ஆடுகளம் தொடர் நேற்று(ஜூலை 18) நிறைவடைந்தது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் முடிவடைந்தது, ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் தொடர், 439 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், நாளை(ஜூலை 20) முதல் சிறகுகள் என்ற புதிய தொடர் பிற்பகல் 2 மணிக்கும், லட்சுமி மற்றும் இருமலர்கள் தொடர்களின் சங்கமம் பிற்பகல் 2.30-3.30 வரை ஒளிபரப்பாகவுள்ளது.
The serial Aadukalam, which was being aired on Sun TV, has concluded.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.