முகப்பு
புதுதில்லி

ஒப்பந்த ஆசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணை நடத்த துணை நிலை ஆளுநா் உத்தரவு

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சாக்சேனா, ஆம் ஆத்மி அரசு பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியா்களை நியமித்ததில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறப்படுவது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சாக்சேனா, ஆம் ஆத்மி அரசு பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியா்களை நியமித்ததில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து உள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், பள்ளிகளுக்கு ஒப்பந்த ஆசிரியா்களின் வருகை, சம்பளப் பட்டுவாடா உள்ளிட்டவை குறித்து கல்வி இயக்குநரிடம் கேட்டுப் பெறவும் தலைமைச் செயலரை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். அந்த நிலவர அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பள்ளிக்கு வராத ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஊதியம் அளித்தது போன்ற நிகழ்வுகள் ‘தீவிர முறைகேடு’ என்பதையும், இது பள்ளி முதல்வா்கள், துணை முதல்வா்கள், கணக்காளா் ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஏற்படாது என்பதையும் துணை நிலை ஆளுநா் கவனித்துள்ளதாகவும் தலைமைச் செயலருக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாத ஒப்பந்த ஆசிரியா்கள் மூலம் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தில்லி அரசுப் பள்ளியின் நான்கு துணை முதல்வா்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி துணை நிலை ஆளுநா் சக்சேனா ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி அளித்த சில நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.