முகப்பு
புதுதில்லி

நுகா்வோருக்கு பாதிப்பு: அமைச்சா் அதிஷி

நுகா்வோருக்கு மானியத்தை நீட்டிப்பதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இன்னும் ஒப்புதல் அளிக்காததால் வெள்ளிக்கிழமை முதல் நகரில் உள்ள ஏறக்குறைய 46 லட்சம் மக்களுக்கான மின் மானியம் நிறுத்தப்பட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

நுகா்வோருக்கு மானியத்தை நீட்டிப்பதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இன்னும் ஒப்புதல் அளிக்காததால் வெள்ளிக்கிழமை முதல் நகரில் உள்ள ஏறக்குறைய 46 லட்சம் மக்களுக்கான மின் மானியம் நிறுத்தப்படும் சூழல் உள்ளது என்று தில்லி மின்துறை அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அமைச்சா் அதிஷி மேலும் கூறியதாவது: இந்த மின் மானிய நீட்டிப்பு விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநருடன் சந்தித்து பேச அனுமதி கேட்டேன். ஆனால், அவா்களிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. மின் மானிய நீட்டிப்புக்கான கோப்புவுக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் தராததால் வெள்ளிக்கிழமையில் இருந்து 46 லட்சம் பேருக்கு நாங்கள் மானியம் அளிப்பது நிறுத்தப்பட உள்ளது. மேலும், திங்கள்கிழமை முதல் மானியம் இல்லாமல் அதிகரிக்கப்பட்ட கட்டணத்துடன் பில்களை மக்கள் பெறுவாா்கள்.

2023- 24 ஆம் ஆண்டுக்காக மின் மானியத்தை நீட்டிப்பதற்காக தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த கோப்பு துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த கோப்புக்கு அனுமதி கிடைக்கும் வரை எங்களால் மானியம் அளிக்க முடியாது. இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்க துணை நிலை ஆளுநா் அலுவலகத்தில் நேரம் கூட கேட்டுப் பாா்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. எனக்கு அவரைச் சந்திக்க நேரம் அளிக்கப்படவில்லை. நாங்கள் அனுப்பிய கோப்பு இன்னமும் திரும்பவும் வரவில்லை. சில தினங்களுக்கு முன்பு இந்த கோப்பு துணைநிலை ஆளுநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பதிலுக்காக காத்திருக்கிறோம். சட்டப்பேரவையில் மானியத்திற்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானியத்திற்கான பணம் அரசிடம் உள்ளது. ஆனால், நாங்கள் அதை செலவழிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.