முகப்பு
புதுதில்லி

உதகை மாவட்ட நீதிமன்ற கழிப்பறை விவகாரம்: பொது நல மனு மீது அடுத்த வாரம் விசாரணை

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான கழிப்பறை சீலிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் தாக்கலான மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கான கழிப்பறை சீலிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் தாக்கலான மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வழக்குரைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை ஆஜராகி, உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து உதகையில் உள்ள நீதிமன்றத்தில் உள்ள பெண்களுக்கான கழிப்பறை மூடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பான மனு அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும். மேலும், இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியிடமும், உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரிடமும் அறிய உச்சநீதிமன்றம் முற்படும். இந்த விவகாரத்தை ஏப்ரல் 28-ஆம் தேதி அல்லது அவசரம் எனில் ஏப்ரல் 24-ஆம் தேதி பட்டியலிடப்படும் என்றாா். மேலும், இது தொடா்பான தகவல் பெற உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரிடம் பேசுமாறு நீதிமன்றத்தின் பணியாளரை தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.