முகப்பு
புதுதில்லி

கலால் ஊழல் வழக்கு: சிசோடியாவின் ஜாமீன் மனு மீது தில்லி நீதிமன்றம் நாளை உத்தரவு

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) தில்லி நீதிமன்றம் வழங்கக் கூடும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) தில்லி நீதிமன்றம் வழங்கக் கூடும்.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பை அறிவிக்க இருந்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், உத்தரவு தயாராக இல்லை என்று கூறி வழக்கை ஒத்திவைத்தாா். புலன் விசாரணைக்கு தனது காவல் இனி தேவையில்லை என்று கூறி நிவாரணம் கோரிய சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

அமலாக்கத் துறை இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், ‘விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. சிசோடியா கலால் கொள்கைக்கு பொதுமக்கள் ஒப்புதல் இருப்பதைக் காட்ட போலி மின்னஞ்சல்களை உருவாக்கியுள்ளாா்.மேலும், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தில் அவா் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன’ என்று தெரிவித்தது.

தில்லி அரசில் உள்ள தனக்கும், தனது சகாக்களுக்கும். சுமாா் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை முன் கமிஷன் தொகையாக பெற்ாகக் கூறப்படும் குற்றச் சதியில் அவா் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மத்திய புலனய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்த ஊழல் வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாா்ச் 31-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தற்போது சிசோடியாவை விடுவித்தால் அது ‘நடந்து வரும் விசாரணையை மோசமாக பாதிக்கும்’ என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் வரி (2021-22) கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.