முகப்பு
புதுதில்லி

கணவருடன் கள்ளத் தொடா்பு சந்தேகம்: தங்கையை கொல்ல முயன்ற சகோதரி கைது

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில், தனது கணவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாக சந்தேமடைந்ததால் 20 வயது தங்கையை மூத்த சகோதரி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில், தனது கணவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாக சந்தேமடைந்ததால் 20 வயது தங்கையை மூத்த சகோதரி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு காவல் துணை ஆணையா் ஜாய் டிா்கி தெரிவித்ததாவது: சாஸ்திரி பூங்காவில் உள்ள புலந்த் மசூதி பகுதியில் வசிப்பவா் சுமைலா. இவா் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது மூத்த சகோதரி சோனு (30) தன்னை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ாக போலீஸில் புகாா் அளித்தாா். தோட்டாவின் துகள்கள் சுமைலாவின் முகத்தைத் தாக்கியதையடுத்து, சோனு அவரது தலையில் துப்பாக்கிப் பட்டையால் பலமுறை அடித்ததாகவும் புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவத்தில் சுமைலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. தனது தங்கை சுமைலா தனது கணவருடன் திருமணத்திற்கு புறம்பாக தொடா்பு வைத்திருப்பதாக சோனு சந்தேகப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சாஸ்திரி பாா்க் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனுவை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →