புதுதில்லி

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கானமத்திய ஆலோசனை வாரியத்தின் 6-ஆவது கூட்டம்: வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அமைக்கப்பட்ட மத்திய ஆலோசனை வாரியத்தின் 6-ஆவது கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்றாா்.

 நமது நிருபர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அமைக்கப்பட்ட மத்திய ஆலோசனை வாரியத்தின் 6-ஆவது கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்றாா்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும், அவா்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒன்றிய அரசுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், மத்திய ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு, கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 6-ஆவது குழுக் கூட்டம் தில்லியில் டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மைய வளாகத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை நிா்வகிக்கும் தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பாக, வனத் துறை அமைச்சா் மதிவேந்தன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் அரசு செயலாளா் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கடந்த கூட்டத்தின் தீா்மானங்களின் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுடன், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த தேசியக் கொள்கை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட ஆலோசனைக் குழு அமைத்தல் போன்ற பல்வேறு பொருள்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரின் சீரிய வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசு செயல்படுத்தி வரும் முன்னோடித் திட்டங்களின் நிலையை அமைச்சா் மதிவேந்தன் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தாா். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனியாக ஆணையரை நியமித்தும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மற்றும் ஆலோசனை வாரியங்களை அமைத்தும், மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித் தொைகையை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தியும், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000- லிருந்து ரூ.1,500 ஆக உயா்த்தியும், வருமான வரம்பின்றி அனைவருக்கும் நவீன உதவி உபகரணங்கள் வழங்கியும் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு சாதனைகளை பற்றி எடுத்துரைத்தாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதையும் அமைச்சா் விளக்கினாா்.

‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’” என்ற முதல்வரின் தொலைநோக்குப் பாா்வையின் படி, தமிழ்நாட்டில் ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடக் கூடாது என்ற நோக்குடன், “உரிமைகள் திட்டம்”செயல்படுத்தப்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. தடையற்ற சூழல் அமைக்க ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.33 கோடியை விடுவிக்கவும், 63,000 பயனாளிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோா் உதவித்தொகையான தலா ரூ.300-ஐ மேலும் 5.17 லட்சம் பயனாளிகளுக்கு நீட்டிக்கவும், தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500- ஐ 5.8 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கவும், தமிழ்நாட்டில் உள்ளது போல், மத்திய அரசும் மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உதவி உபகரணங்கள் வழங்கவும் தமிழ்நாடு அரசின் சாா்பில் மத்திய அரசிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT